அரியாலை கிழக்குப் பகுதியில் அரசசார்பற்ற நிறுவனமொன்றினால் அமைத்துக் கொடுக்கப்படும் ஒருதொகுதி வீடுகளின் கூரை வேலைகளின் தரம் தொடர்பில் குறித்த வேலைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள டக்ளஸ் தேவானந்தா செயலகத்தில் 07-02-2014 இடம்பெற்ற வீட்டுத்திட்ட பயனாளிகளுடனான சந்திப்பையடுத்தே அவர் இப் பணிப்புரையை விடுத்துள்ளார். அரியாலை கிழக்குப் பகுதியில் சொன்டா கிளப் -01 என்ற அரசசார்பற்ற நிறுவனம் 16 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பொருட்டு ஏற்கனவே மூன்று வீடுகளை நிர்மாணித்து பயனாளிகளிடம் கையளித்துள்ளது.
இதனடிப்படையில் மக்களது கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் அவர்கள் குறித்த நிறுவனத்தின் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்படும் வரையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை தற்காலிகமாக நிறுத்துமாறு பணிப்புரை விடுத்ததுடன், இணக்கம் காணப்பட்டதன் பின்னர் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் அவர்கள், குறித்த அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுடனும் மற்றும் ஒப்பந்தகாரர்களுடனும் கலந்துரையாடியதுடன் மேற்படி விடயம் தொடர்பில் விரைவில் கலந்துரையாடலொன்றைய மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.