அவசரமாக சம்பந்தன் புதுடெல்லி நோக்கிப் பயணம்

ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேச்சு நடத்தவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவசரமாக சம்பந்தன் புதுடெல்லி நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச்சு நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், பிரதான வேட்பாளர்கள் இருவரும் தமிழர் பிரச்சினை பற்றி எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குறித்து சம்பந்தன் தெளிவுபடுத்த உள்ளார்.

சம்பந்தன் நாடு திரும்பிய பின்னர் வடக்கு சிவில் சமூக கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கோரிக்கைகள் அடங்கிய ஆவணமொன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மோடி அரசாங்கம் அழைத்துள்ளதாக முன்னதாக வெளியான ஊடகத் தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டமைப்பு இவ்வாறு அறிவித்திருந்தது.

ஊடகம்சம்மந்தன்சிங்களம்ஜனாதிபதிதமிழ் தேசிய கூட்டமைப்புதேர்தல்பயணம்புதுடெல்லி
Comments (0)
Add Comment