ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டி போராட்டம்!

மட்­டக்­க­ளப்பு, குடி­யி­ருப்பு கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தில் நிலவும் குறை­களை உட­ன­டி­யாக நிவர்த்தி செய்­யு­மாறு கோரி நேற்று திங்­கட்­கி­ழமை காலை மாண­வர்கள் மற்றும் பெற்றோர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர் ஆசிரி­யர் ­பற்­றாக்­கு­றையை நிவர்­த்தி செய்­ய வேண்டும், அதிபர் நிய­மிக்க வேண்டும், ஆசி­ரி­யர்கள் உரிய நேரத்­துக்கு பாட­சா­லைக்கு வர­வேண்டும் போன்ற கோரிக்­கை­களை முன்­வைத்து ஆர்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.
கடந்த ஆறு மாதங்­க­ளுக்கு மேலாக அதி­ப­ருக்­கான வெற்­றிடம் நில­வு­கி­றது. இவ்­ விடயம் தொடர்­பாக கல்வித் திணைக்­களம் எது­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை என பெற்­றோர்கள் குற்­றம் ­சு­மத்­தினர். அதிபர் இல்­லாத கார­ணத்தில் ஆசி­ரி­ய­ரொ­ருவர் பதில் கட­மையில் ஈடு­ப­டு­வதால் மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்கை பாதிக்­கப்­ப­டு­கி­றது, சில வகுப்­பு­க­ளுக்கு ஆசி­ரி­யர்கள் பற்­றாக்­குறை காணப்­ப­டு­கி­றது.

பாட­சா­லைக்கு ஆசி­ரி­யர்கள் நேரத்­துக்கு சமுக­மளிப்­ப­தில்லை என ­கு­றித்த இடத்­துக்கு வரு­கை­தந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சா.வியா­ழேந்­திரன் மற்றும் மட்­டக்­க­ளப்பு வலயக் கல்விப் பணிப்பார் கே.பாஸ்­கரன் ஆகி­யோ­ரிடம் பெற்­றோர்கள் முறை­யிட்­டனர். அவ்­ வி­டயம் தொடர்­பாக கருத்து தெரி­வித்த மட்­டக்­க­ளப்பு வலயக் கல்விப் பணிப்பார் கே.பாஸ்­கரன் ஆசி­ரியர் பற்­றாக்­குறை தொடர்­பாக மாகாண கல்வித் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்­துள்ளோம் புதிய ஆசி­ரியர் நிய­ம­னங்­கள் மூலம் இந்தப் பாட­சா­லையின் ஆசி­ரி­யர் பற்றாக்குறை நிவர்த்திக்கப்படும்.

அதிபர் தொடர்­பாக நேர்­முகப்­ப­ரீட்சை நடத்­தப்­பட்டு புதிய அதிபர் விரைவில் நியமிக்கப்படுவார், ஆசிரியர்கள் உரிய நேரத்துக்கு வருகை தராமை தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆசிரியர்கல்வித்திணைக்களம்போராட்டம்மட்டக்களப்புமாணவர்கள்
Comments (0)
Add Comment