ஆனையிறவு புகையிர நிலையத்துக்கு சிங்கள பெயர் சூட்ட முடிவு

ஆனையிறவு ரயில் நிலையத்துக்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். ஆனையிறவு ரயில் நிலையம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து திரட்டும், 15.5 மில்லியன் ரூபாவைக் கொண்டு, புனரமைப்புச் செய்யப்படவுள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த புனரமைப்புத் திட்டத்துக்கான யோசனைக்கு ஒப்புதல் பெற்றுள்ளார். இதன் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் உதவியைப் பெறுவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.

கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படும் போது, ஆனையிறவு தொடருந்து நிலையத்தின் பெயரை சேனஹசக்க தொட்டுபொல என்று மறுபெயர்சூட்ட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் கோரியுள்ளார்.

ஆணையிறவு
Comments (0)
Add Comment