ஆள்பதிவினை மோற்கொள்ளும் படையினரின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்

போர் நிறைவடைந்துள்ள போதும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் படையினர் ஆள்பதிவு நடவடிக்கையினை பிரதேச செயலகம் ஊடாக மேற்கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

வடமாகாணத்தில் யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் கடந்துள்ள நிலையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் படையினரின் ஆள்பதிவு நடவடிக்கைகள் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முல்லை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மக்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அவ்வாறு பதிவு நடக்கவில்லை என படையினரும், பதிவு நடக்கின்றது என பிரதேச செயலரும் கூறுகின்றனர்.

மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று முன்தினம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மக்கள் மேற்படி குற்றச்சாட்டினை சுமத்தியிருக்கும் நிலையில் படையினரும், பிரதேச செயலரும் மாறுபட்ட விளக்கத்தினை கூறியிருக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக சபையில் பேசப்படுகையில், மாவட்டத்தின் மற்றய பிரதேச செயலர் பிரிவுகளில் இவ்வாறான படையினரின் ஆள் பதிவு நடவடிக்கைகள் நடைபெறுவதில்லை. ஆனால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மட்டும் புதிதாக வரும் மக்கள் படையினரால் பதியப்படுகின்றார்கள். அவர்களுடைய பதிவு நிச்சயமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரப்படுகின்றது.என மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணை தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் றிஷாட் பதியூதின் ஆகியோர் கூட்டத்தில் படையினர் சார்பில் கலந்துகொண்டிருந்த சிவில் தொடர்பு படை அதிகாரியிடம் அவ்வாறு ஆள் பதிவு நடவடிக் கைகள் இடம்பெறுகின்றனவா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதன்போது அவ்வாறான ஆள் பதிவு நடவடிக்கைகள் எதனையும் தாங்கள் மேற்கொள்ளவில்லை. என படை அதிகாரி பதிலளித்தார். பின்னர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலரிடம் அதே கேள்வியை எழுப்பியபோது அவ்வாறா ன பதிவு மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் வற்புறுத்தலின் பெயரில் பதியப்படவில்லை. பிரதேச செயலக அதிகாரிகள் பதிவு செய்யும்போது தாங்களும் அதில் இருக்கவேண்டும்.

என படையினர் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாகவே தாங்கள் படையினரை அனுமித்தாக கூறினார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் கட்டாயப்படுத்திக் கேட்கவில்லை. என கூறவேண்டாம். தாங்களும் இருக்கப்போகின்றோம். பதிவு எடுக்கப்போகின்றோம். என படையினர் கேட்பதே கட்டாயப்படுத்தல் என்றே கூறவேண்டும் என கூறியதுடன், படையினரின் இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

ஆள்பதிவுஊடாகசெயலகம்தெரிவித்துள்ளார்கள்நடவடிக்கையினைநிறைவடைந்துள்ளபகுதிகளில்படையினர்பிரதேசபுதுக்குடியிருப்புபோதும்போர்மக்கள்முல்லைத்தீவுமேற்கொண்டுவருவதாக
Comments (0)
Add Comment