ஆஸ்திரேலியாவின் சிட்னி, பெண்டிகில் கில்பா வீதியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற வீதிவிபத்தில் ஈழ ஏதிலி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிகபப்ட்டுள்ளது.
மன்னார் பேசாலையை சேர்ந்த 25 வயதுடைய மேர்வின் பெர்ணான்டோ என்ற இளைஞரே இவ்வாறு உயிரழந்துள்ளார்.
குறித்த இளைஞன் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த ‘ட்ரக்’ மோதியதிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மலேசியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த 2012 ஆம் ஆண்டு படகு மூலம் மேர்வின் பெர்ணான்டோ ஆஸ்திரேலியா சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.