இங்கிலாந்து கோவண்டிரி நகரில் நேற்று மறைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல்துறையின் பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் சிவசுப்பிரமணியம் சிவகாமி அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
தமிழீழ மக்களின் விடுதலைக்காக இவர் 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து அரசியல் திறமையும் தேசியப் பற்றும் கொண்டு போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்தவர்.
இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்துக்கொண்டு மறைந்த தமிழினியின் திருஉருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.