காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 10-வது நாளாக ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட்
நேற்று நடைபெற்ற மகளிர்கான பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் பி.வி. சிந்துவை எதிர்த்து களம் இறங்கினார்.
இந்த போட்டியில் பி.வி.சிந்துவை 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றார். தோல்வியடைந்த பி.வி.சிந்துவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
இதன்மூலம் இந்தியா 26 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என 62 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.