அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய இழுவை படகுகளை இலங்கை கடற்பரப்பில் அனுமதிக்க முடியாது. மருதங்கேணி பிரதேச கட்டைக்காடு சென் மேரீஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.எட்வேட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடமராட்சி மற்றும் கட்டைக்காடு, தாளையடி பிரதேச கடற்பரப்பில் இந்திய ரோலர் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளின் காரணமாக மீன்கள் அழிக்கப்படுகின்றன எனவும்,
இதனால் தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இழுவை மடியினை இழுக்கும் போது இரு பக்கமும் பலகை போட்டு இழுக்க வேண்டும் என்பதினால் கடலில் காணப்படுகின்ற பவளக்கற்கள் மற்றும் பாறைகள் அழிந்து விடும்.
எனவேதான் இந்திய இழுவைப்படகு தமது கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதனை அனுமதிக்க கூடாதென கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.