வன்னிப் பிரதேசத்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரசேத்தில் மீளக்குடியமந்துள்ளவர்களுக்கு, இந்திய வீட்டுத் திட்டத்திற்குரிய பயனாளிகள் தெரிவு போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனுக்குலத்திற்கான வீடமைப்பு நிறுவனத்தின் அதிகாரிகள், மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வன்னிப் பிரதேசத்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் போரதீவுப்பற்று பிரதேத்தில் மீளக் குடியமந்துள்ளார்களென 125 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், ஆனால் இவ்வாறு மீளக்குடியமர்ந்துள்ளவர்க்கென80 இந்திய வீட்டுகள்தான் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் தெரிவித்தார். இவற்றுள் இவ்வீட்டுத்திட்டம் பெறுவதற்குத் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் அதிகாரிகளினால் பரிசீலனை செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என் வில்வரெத்தினம் மேலும் தெரிவித்தார்