இந்திய வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகள் யாழ் வருகை!

 மீனவர்களுடன் பேச்சில் ஈடுபட இந்திய   வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஜீ.பாரத்தசாரதி உட்பட இருவர் இன்றைய தினம் யாழிற்கு வருகைதருகின்றனர்.

வடமாகாண மீனவர்சங்க பிரதிநிதிகளை சந்திக்கும் நோக்கில் இன்றைய தினம் இந்திய வெளியுறவுத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி உட்பட இருவர் இன்று காலை யாழிற்கு வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் அதிகாரிகள் பகல் 12 மணிக்கு யாழில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் வட மாகாண மீனவர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வட மாகாண முதலமைச்சர் , ஆளுநர் ஆகோயோரையும் சந்திக்கவுள்ளார்.

குறித்த அதிகாரி இந்திய – இலங்கை  நன்புறவின் மூத்த அதிகாரியாவார் நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கு கொண்டதோடு இன்றைய தினம் ஒரு நாள் பயணமாகவே இன்று யாழ் வருகைதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது

அதிகாரிகள்ஆளுநர்இந்தியாஇலங்கைபேச்சுவார்த்தைமீனவர்கள்வடமாகணம்
Comments (0)
Add Comment