இன்னும் 4000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்ப்படுமாம்!

மேலும் 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ  கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கா தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற, கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்காவிற்கான பிரியாவிடை நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் 20,000 ஏக்கர்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 2000 ஏக்கர் காணிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

அந்தவகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் யாழ்.மாவட்டத்தின் காங்கேசன் துறைமுகப் பகுதியின் சில இடங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதுகாப்பு படையினர் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் காணிகளை வழங்கி, நம்பகரமான செயற்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் தாயகத்தின் யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஐர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கா, இராணுவ தலைமைப்பீட உயர் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று செல்வதுடன், கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி, வடமாகாணத்திற்கான   கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவம்காணிகள்மகேஸ் சேனாநாயக்காயாழ்ப்பாணம்விடுவிப்பு
Comments (0)
Add Comment