இன்றைய தினம் சர்வதேச மகளிர் தினம் .


சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.
பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் இந்த நாள் அமைந்துள்ளது.

பெண்கள் தங்கள் வாழ்வியலை சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாக கொண்டதே இந்த நிகழ்வு.
இந்நிலையில் யாழ்.குடாநாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மகளீர் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

இன்று யாழ்ப்பாணம் கொட்டடி சனசமூக நிலையத்திலும் மகளீர் தினம் கொண்டாடப்பட்டது.
யாழ்.கொட்டடி கிராம அபிவிருத்தி சங்கமும் ,கொட்டடி சன சமூக நிலையமும் இணைந்து இந்த நிகழ்வை முன்னெடுத்தது. கொட்டடி சனசமூக நிலைய முன்றலில் நா.தனேந்திரன் தலைமையில் காலை 10.30 மணியளவில் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்விக்கு பிரதம விருந்தினராக யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவும், சிறப்பு விருந்தினராக யாழ்.பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் இ.யூட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சமூக சேவைகளை மேற்கொண்டு வருகின்ற அக் கிராமத்தை சேர்ந்த 10 பெண்களுக்கு சேவை நலன் பாராட்டி பிரதமவிருந்தினரால் பரிசில்கள் வழங்கப்பட்டன.

சர்வதேச மகளிர் தினம்பெண்கள் முன்னேற்றத்தை
Comments (0)
Add Comment