இரணைதீவில் மீள்குடியேற்றம் கோரி போராட்டம் .

கிளிநொச்சி இரணை மாதாநகர் பகுதியில் பூர்வீக நிலமான இரணைதீவில் மீள்குடியேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு இன்று 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரணைதீவுஇலங்கைகிளிநொச்சிதவராசாவடமாகாணம்
Comments (0)
Add Comment