இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் – சிவி விக்கி

இலங்கைத் தமிழர் பிரச்­சி­னையில் இந்­தியா தலை­யிட்­டா­லேயே நிரந்­தர தீர்­வு­ காணமுடியும். இந்­தியா இன்றி இப்­பி­ரச்­சி­னையில் தீர்வு காணமுடி­யாது என வடமாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

இலங்கை அரசு எல்லா விதத்­திலும் தங்­களை இயங்கவிடாமல் தடுப்­ப­தாகத் தெரி­வித்த அவர்இ ஜனா­தி­பதி மஹிந்த தங்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியை செயற்­ப­டுத்த வேண்டும் என்­ப­தையே அவ­ரிடம் தாங்கள் கோரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

சென்னை பத்­தி­ரி­கை­யாளர் மன்­றத்தில் நேற்று செய்­தி­யா­ளர்­களை சந்­தித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தி­ருந்தார்.

இதன்­போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தமிழர் நிலையில் மாற்றம் இல்லை போருக்குப் பின்­னரும் இலங்­கையில் தமி­ழர்­களின் நிலை சற்றும் மாற­வில்லை. இலங்கை வட மாகா­ணத்தைப் பொறுத்­த­வ­ரையில் 2 நிர்­வா­கங்கள் செயற்­ப­டு­கின்­றன. எங்­க­ளது மாகாண சபை ஒரு நிர்­வா­கத்­தையும் இலங்கை அரசு மற்­றொரு நிர்­வா­கத்­தையும் நடத்­து­கி­றது. மாகாண சபையின் செய­லாளர் என்­ப­வரைக் கூட எங்­க­ளுடன் ஆலோ­சிக்­கா­ம­லேயே இலங்கை அரசு நிய­மித்­தி­ருக்­கி­றது.

ஆளுநர், தலைமைச் செய­லாளர் உள்­ளிட்டோர் ஒரு நிர்­வா­க­மா­கவும் மக்கள் பிர­தி­நி­திகள் நாங்கள் ஒரு நிர்­வா­க­மா­கவும் இயங்கி வரு­கிறோம். வடக்கு மாகா­ணத்தில் இலங்கை அரசு ரயில் திட்டம் போன்­ற­வற்றை செயற்­ப­டுத்­து­வது உல­குக்கு அங்கே அனைத்தும் நன்­றாக உள்­ளது எனக் காட்­டு­வ­தற்­கா­கத்தான். இதனால்இ தமிழ் மக்­க­ளுக்கு எந்த ஒரு நன்­மையும் இல்லை.

இலங்­கையில் போரில் பாதிக்­கப்­பட்ட 18 ஆயிரம் பேரும், 1 இலட்சம் இளம் வித­வை­களும், பெற்­றோரை இழந்த எண்­ணற்ற குழந்­தை­களும் ஆத­ர­வற்று இருக்­கின்­றனர். இளை­ஞர்கள், பெண்கள், அன்­றாடம் குடும்பம் நடத்த பண­வ­சதி இன்றி வேலை இல்­லாமல் தவித்து வரு­கின்­றனர்.

போரில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு தேவை­யான மருத்­துவ வச­தி­களும் கிடைக்­க­வில்லை. இந்­தியா முன்­வந்து வீடு கட்­டித்­தரும் திட்­டத்தில் தகு­தி­யா­ன­வர்­க­ளுக்கு வீடு கிடைப்­ப­தில்லை. அர­சியல் செல்­வாக்குஇ ஆள்­பலம் உள்­ள­வர்­க­ளுக்கு வீடு கிடைக்­கி­றது. இலங்கை அரசு எங்­களை எல்லா விதத்­திலும் இயங்க விடாமல் தடுக்­கி­றது. அதி­காரம் இல்­லாமல் தான் நான் முத­ல­மைச்­ச­ராக செயற்­ப­டு­கிறேன்.

இலங்கை தமிழர் பிரச்­சி­னையில் இந்­தியா தலை­யிட்டால் தான் நிரந்­தர தீர்­வு­காண முடியும். இந்­தியா இன்றி இப்­பி­ரச்­சி­னையில் தீர்வு காண முடி­யாது.
இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் 13-ஆவது திருத்தச் சட்டம் எங்­க­ளுக்கு நன்மை அளிக்­காது. அதில் பல்­வேறு சிக்கல் நில­வு­கி­றது. தமி­ழர்கள் தங்கள் வாழ்­வு­ரி­மை­யைப்­பெற இந்­திய அரசு தலை­யிட்டு உதவி செய்ய வேண்டும்.

இலங்கை அர­சுக்கு பல்­வேறு தரப்­பி­னரும் நெருக்­கடி கொடுக்கும் போதுதான் அவர்கள் சில­வற்றை நிறை­வேற்­று­கி­றார்கள் இல்­லை­யென்றால் எதையும் அவர்கள் கண்ட கொள்­வ­தில்லை.

5 தமி­ழக மீன­வர்­க­ளுக்கு இலங்­கையில் தூக்குத் தண்­டனை விதிக்­கப்­பட்ட சம்­ப­வத்­துக்கு தமிழ்­நாட்­டி­லி­ருந்து ஒட்­டு­மொத்த எதிர்ப்பும் எழுந்­துள்­ளது. இது­தொ­டர்பில் இந்­திய அரசும் இலங்­கை­யுடன் பேசி வரு­கி­றது.

1976 க்குப் பின்னர் தூக்கு நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. சமீ­பத்தில் என்னை மீனவ குடும்­பத்­தி­னரும் சந்­தித்­துப்­பே­சி­னார்கள். அவர்­க­ளிடம் நாங்கள் கொடுத்த உறுதி மொழி என்­ன­வென்றால்இ 1976 ஆம் ஆண்­டி­லி­ருந்து இலங்­கையில் தூக்குத் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்றும்இ சட்­டத்தில் அவ்­வாறு கூறப்­பட்­டி­ருந்­தாலும் அத்­த­கைய கடு­மை­யான எந்த வித நட­வ­டிக்­கை­யிலும் இலங்கை அரசு ஈடு­ப­ட­வில்லை என்று கூறினேன்.

இதில் பாதிப்­புக்கு உள்­ளா­ன­வர்­க­ளுக்கு தூக்குத் தண்­ட­னைக்கு பதில் நன்­மை­களே கிடைக்­கக்­கூடும். இந்த வழக்கு நீதி­மன்றில் இருப்­பதால் அதி­க­மாக இதில் விமர்­சிக்க முடி­யாது என்­கிறேன்.

தூக்குத் தண்­டனை விதிக்­கப்­பட்ட 5 மீன­வர்­க­ளையும் மத்­திய சிறைக்கு மாற்ற முடி­யுமா என்­பது பற்றி எங்­க­ளுக்கு தெரி­யாது. இலங்கை அரசு செல்­வதை செயற்­ப­டுத்­து­வ­தில்லை.

இலங்கை ஜனா­தி­பதி சொல்­வது எதையும் உடனே செயற்­ப­டுத்­து­வது கிடை­யாது. 2009 ஆம் ஆண்டு இலங்­கையில் போர் முடிந்­ததும் வட மாகாண தேர்­தலை நடத்­த­தப்­போ­வ­தாக அவர் கூறினார். ஆனால்இ அப்­போது நடத்­த­வில்லை.

இந்த விடயத்தில் இந்தியா தலையிட்டு வலியுறுத்திய பின்னரே 2013 ஆம் ஆண்டு எங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. எனவேஇ பிரதமர் மோடி அரசு இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகண்டிட உதவ முடியும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் சிங்கள குடியேற்றமும் அதிகம் நடைபெறுகிறது. ஜனாதிபதி மஹிந்தவிடம் நாங்கள் கோருவது எமக்கு கொடுத்த வாக்குறுதியை செயற்படுத்துங்கள் என்பதைத்தான்” என்றார்

இந்தியாஇலங்கைசிவி விக்னேஸ்வரன்ஜனாதிபதிதமிழர்தலைவர்தீர்வுபிரச்சனைமகிந்தமாகாணம்வடக்கு
Comments (0)
Add Comment