இலங்கை மீனவர்களை விடுதலை செய்வது குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தடை ஏற்படுத்தி வருவதுடன் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக மீன்பிடிவள பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன்பிடிப்பதனை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாலைதீவு கடற்பரப்பிற்கு அருகாமையில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.