யாழ்ப்பாண மாவட்டத்தில் உயர் பாதுகாப்பிலிருந்து மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.
வீமன் காமம், ஒட்டகப்புலம் ஆகிய பகுதிகளுக்கு சென்ற அவர், ராணுவத்தின் வசமுள்ள ஏனைய நிலங்களையும் மீட்டு உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.