10கிலோ கேரளா கஞ்சா இளவாலையில் மீட்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா நேற்று மீட்கப்பட்டுள்ளது என இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஆர் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இக்கஞ்சாவினை வீட்டில் வைத்திருந்ததாக விபுலானந்தா வீதியை சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி குறித்த வீட்டினை சோதனையிட்ட போது கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

6 கஞ்சாப் பொதிகளும் கேரளா மொழி பத்திரிகையினால் பொதிசெய்யப்பட்டுக் காணப்பட்டுள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ரூபா 20 இலட்சத்திற்கு அதிகமானது என பொலிஸாரினால் ஊகிக்கப்படுகின்றது.

இளவாலைகஞ்சாகேரளாபிரதேசம்மீட்புயாழப்பாணம்வீடு
Comments (0)
Add Comment