இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு – திருப்பெருந்துறையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். திருப்பெருந்துறையில் உள்ள ஆலயம் ஒன்றின் பூசகரின் மகனாகி 17 வயதுடைய நந்தகோபால் வசந் என்ற இளைஞனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனே தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இவரை எவரும் கொலை செய்து தூக்கில் இட்டுள்ளார்களா? என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞன்சடலமாகதூக்கில்தொங்கியநிலையில்மீட்பு
Comments (0)
Add Comment