யாழ்ப்பாணம், பிறவுண் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று பகல் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1941ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதியன்று பிறந்த அவர் பல நூல்களை எழுதி வெளியிட்டார். இதில், சிறுகதைகள் உள்ளிட்ட வரலாற்று ஆய்வு நூல்களும் அடங்குகின்றன.
வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளில் அவரது தொடர்கதைகள் வெளிவந்து வாசகர்கள் மத்தியில் பிரபல்யமாகின. அவரது வாடைக்காற்று மற்றும் புதினம் ஆகிய படைப்புக்கள் திரைப் படமாகவும் வெளி வந்தன.
கந்தையா – அன்னம் மாளின் 8 ஆவது பிள்ளையான குணராசா, பேராதனைப்பல் கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
அத்துடன், கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபராகவும் அரச சேவையில் இருந்து ஓய்வுபெறும் முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பதிவாளரா கவும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.