இதன்படி, நிர்க்கதியாகியுள்ள இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பினாங் மாநில பிரதி முதலமைச்சர் பீ.ராமசாமி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் இந்தோனேஷிய உதவி ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த புகலிட கோரிக்கையாளர்களை அச்சே பிராந்திய நிர்வாகம் சிறந்த முறையில் பார்த்துக்கொள்ளும் என இந்தோனேஷிய உதவி ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், பினாங் மாநில பிரதி முதலமைச்சரின் கோரிக்கைக்கு இந்தோனேஷியா உத்தியோகபூர்வ பதில் எதனையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.