உண்ணாப்புலவு மருத்துவ மனையில் மர்ம நபர் சோதனை காவலாளி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரில் உள்ள உண்ணாப்புலவு மருத்துவ மனையில் 09.07.18 அன்று இரவு உந்துருளியில் வந்த நபர் ஒருவர் உண்ணாப்புலவு மருத்துவ மனைக்கு சென்று தான் மருத்துவ அதிகாரி என்றும் மருத்துவ மனையினை பரிசோதனை செய்ய வந்துள்ளதாகவும் கூறிவிட்டு இரவு11.00 மணியளவில் மருத்துவமனையினை சோதனை செய்துவிட்டு அவரது உந்துளிக்கு வரி,மற்றும் காப்பீடு இல்லை என்பதற்காக காவலாளியிடம் கொடுத்துவிட்டு காவலாளியின் உந்துருளியினையும் வரி, காப்புறுதி அட்டைகளை வாங்கிக் கொண்டு அளம்பில் மருத்துவ மனையினை சோதனை செய்ய போவதாக சொல்லி சென்ற நபர் இதுவரை உந்துருளி கிடைக்காத நிலையில் 10.07.18 அன்று முல்லைத்தீவு உண்ணாப்புலவு மருத்துவமனையினை சேர்ந்த காவலாளி முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இச்சம்பவம் முல்லைத்தீவு மக்கள் மத்தியில் பேசப்படும் விடயமாக காணப்படுகின்றது அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாறு வேடத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் வருகைதந்து சோதனை நடத்தியுள்ளமையினை தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருத்துவ மனைகளை பரிசோதனை செய்ய வந்த மர்ம நபர் யார் என்பது தொடர்பில் பொலீஸாரும் மருத்துவ மனைசார்ந்த அதிகாரிகளும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்