உதவும் இதயங்கள் அமைப்பினூடாக இருகைகளை இழந்த கேதீஸ் வரனுக்கு வாழ்வாதார உதவியை வழங்கினார்கள் யேர்மனைச் சேர்ந்த தமிழ்மாறன் மற்றும் உதயகுமார் குடும்பத்தினர்!
வன்னிப் போரின் போது பல்வேறு வகையிலும் பாதிப்புக்குள்ளான பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கேதீஸ்வரனும் ஒருவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இவர் போரின் போது இருகைகளையும் ஒரு கண்பார்வையையும் இழந்தவராவர்.
வாழ்வாதாரம் எதுவுமற்ற நிலையில் இவருக்கு ஜெர்மன் உதவும் இதயங்கள் அமைப்பினூடாக பெருமனத்துடன் உதவுவதற்கு முன் வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாறன் குடும்பத்தவரும் உதயகுமார் குடும்பத்தினரும் வழங்கிய ஒருஇலட்சம் ரூபா நிதியுதவியை வலிவடக்குப் பிரதேசசபையின் உபதலைவரும் வலிவடக்கு மீள்குடியேற்ற அமைப்பின் தலைவருமான திரு.ச.சஜீவன் எடுத்துச் சென்று சேர்பித்திருந்தார்.
ஊரெல்லாம் கோயிலுக்கு கோபுரம் கட்டவும் வர்ணம் பூசுவதிலும் ஆலாய்பறக்க ஜெர்மனிலுள்ள இந்து ஆலய தர்மகர்த்தா குழுவொன்று யுத்த அவலங்களுடன் வாழும் குடும்ப பெண்ணிற்கு கைகொடுத்து கரைசேர்த்துள்ளது. எனினும் அந்த தர்மகர்த்தா குழுவின் கோயிலும் கூட இப்போது தான் கட்டப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜெர்மனியிலுள்ள கயல் பொன்கந்தசாமி கோவில் தற்போது தான் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இறுதியுத்தத்தினில் கணவரை சரணடையக் கொடுத்த மங்கையற்கரசி (பெயர்மாற்றப்பட்டுள்ளது) தனித்து அவல வாழ்க்கை வாழ்ந்து வரும் சூழலினில் அண்மைய வெள்ளத்தால் நடுத்தெருவிற்கு வந்திருந்தார். இதுதொடர்பான செய்தி அறிந்து கயல்பொன்கந்தசாமி கோவில்ஆலயதர்மகர்த்தா குழு அவரிற்கான வாழ்வாதார உதவியினை வழங்கியுள்ளது.
ஜெர்மனிய உதவும் இதயங்கள் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட அவ்வுதவியை வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளர் ச.சஜீவன் நேரினில் எடுத்து சென்று வழங்கியிருந்தார்.