மாவட்டத்தில் சிறீலங்கா மகளிர் படையில் தமிழ்பெண்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட சிறீலங்கா படை,நேற்று முன்தினம் முதல் துண்டுப்பிர சுரங்களை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநியோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது திருமணமாகாத 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 8ஆம் தரம் அல்லது 9ஆம் தரத்தில் சித்தி பெற்றிருப்பதுடன் விளையாட்டுத்துறை, பொறியியல், உள்ளிட்ட வேறு துறைகளில் தேர்ச்சியுள்ளவர் விண்ணப்பிக்க முடியும். மேலும் ஆங்கில அறிவு, கணணி அறிவு என்பன விஷேடமாக கவனத்தில் கொள்ளப்படவுள்ளன. அத்துடன் மகளிர் படையணியில் இணைந்து கொள்ளும் தொண்டர் சிப்பாய்க்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா வரை கொடுப்பனவு வழங்கப்படுவதுடன்,இலவசமாக சீருடை,உணவு, தங்குமிட வசதி மருத்துவம்,வான்மை விருத்தி பயிற்சி என்பனவும் வழங்கப்படவுள்ளதாகவும் அத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன்15 வருடகால சேவையின் பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் எனவே மகளிர் படையணியில் இணைந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் தமது விண்ணப்பப்படிவங்களை 591ஆவது படையணி – முல்லைத்தீவு,592ஆவது படையணி நாகன்சோலை,593ஆவது படையணி-நாயாறு, 641ஆவது படையணி-பதுக்குடியிருப்பு தெற்கு,642ஆவது படையணி-ஒட்டுசுட்டான், 643ஆவது படையணி-முத்தையன்கட்டு, 681ஆவது படையணி- முள்ளிவாய்க்காள் மேற்கு, 682ஆவது படையணி – புதுக்குடியிருப்பு, 683ஆவது படையணி – உடையார்கட்டு ஆகிய படைத்தலைமையகங்களில் கையளிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திலும், 4ஆம் திகதி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திலும், 5ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும் இது தொடர்பாக நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறும் எனவும் குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் சிறீலங்கா படையில் தமிழ் பெண்களை இணைக்க சிறீலங்கா படைகள் கட்டாயப்படுத்துவதாகவும் அதில் இருந்து தாம் மீள முடியாத நிலையில் உள்ளதாகவும் செய்வதறியாது தாம் தவிப்பதாகவும் அங்கு வசிக்கும் பெண்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.