ஆயினும் அதற்கு திருகோணமலைப்பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. முன்கூட்டியே அனுமதி எடுக்காமையினால்இந்த அனுமதியை தாம் வழங்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர். இந்நிலையில் ஊர்வலத்தில் ஈடுபட்ட தொண்டராசிரியர்களும் ஆதரவாக கலந்துகொண்ட தமிழ் கட்சிப்பிரதிநிதிகளும் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்குத்திரும்பினர். தமக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும். கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என பலகோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து இவ்வூர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இதற்கிடையில் ஏலவே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் உடல் நிலை மோசமான நிலையில் வைத்தியசாலையில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத் தக்கது