ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த வாரம் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வழங்கினார். ஐக்கிய தேசிய கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இந்த வாரம் நடைபெறவுள்ளது.

இதன் போது எதிர்வரும் தேர்தல் தொடர்பிலான இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கப்படவுள்ளது. இதன்படி ஐக்கிய தேசிய கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான இணக்கப்பாடும் இந்த வாரம் எட்டப்படும்.

தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டிய சில விடயங்கள் குறித்த நிபந்தனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியிடம் வழங்கி இருந்ததாகவும், அவற்றுள் பெரும்பாலானவற்றை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பிக்கு ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தது. எனினும் அடுத்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவோ, அல்லது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவோ போட்டியிடுவார்கள் என்ற நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு இணங்கும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயங்களில் ரகசியம் பேணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணக்கப்பாடுஉறுப்பினர்ஐக்கிய தேசிய கட்சிஐனாதிபதிசந்திப்புசந்திரிக்காசம்மந்தன்தமிழ் தேசிய கூட்டமைப்புதேர்தல்ரணில்வாரம்
Comments (0)
Add Comment