ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற சென்னை….

ஐ.பி.எல். இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.

முதலில் பேட் செய்த டெல்லி அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ரிஷப் பந்த் 38 ரன்களும், முன்ரோ 27 ரன்களும் சேர்த்தனர். சென்னை அணி தரப்பில் சஹார், ஹர்பஜன், ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

148 ரன் வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கிய சென்னை அணியின் டூபிளசிஸ், வாட்சன் இருவரும் தலா 50 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தை தந்தனர்.

19 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. ராயுடு 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம், 8வது முறையாக இறுதிப் போட்டிக்குள் சென்னை அணி நுழைந்துள்ளது. 3 முறை சாம்பியன் பட்டத்தை ஏற்கனவே வென்றுள்ள சென்னை அணி, ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்கிறது.

ஐ.பி.எல்.செண்பகம்
Comments (0)
Add Comment