குறித்த நபர் தனது மகளை அழைத்துக்கொண்டு சனிக்கிழமை இரவு 7 மணியளவில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளார். மீன்பிடிக்கச் சென்ற இருவரும் அன்றைய தினம் இரவு வீடு திரும்பாத நிலையில், உயிரிழந்தவரின் மூத்த மகன் நேற்று காலை கடற்கரைக்குச் சென்று பார்த்துள்ளார். இதன்போது தனது தந்தை மற்றும் சகோதரன் ஆகிய இருவரும் மீன் பிடிக்கச் சென்ற படகு கடலில் மூழ்கிய நிலையில் கிடப்பதை கண்டு அயலவர்களிடம் குறித்த சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், கடற்படையினர் மற்றும் கிராம மீனவர்களுடன் இணைந்து கடலில் தேடுதல்கள் நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போது, இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.