இனந்தெரியாத சிலர், நேற்று காலை 7 மணியளவில் தன் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக, தாக்குதலுக்கு உள்ளான இராணுவ சிப்பாய், கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இராணுவ சிப்பாய், சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி வேறு பெரிய வைத்திசாலையில் சிகிச்சைப் பெறவேண்டும் என, பொலிஸாரிடம் அறிவித்துவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.