தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கதிர்காமம் சென்ற இராணுவச்சிப்பாய் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

இராணுவ சிப்பாய்கள்  சிலருடன் சமய வழிபாடுகளில் கலந்துகொள்ள கதிர்காமம் சென்ற இராணுவ சிப்பாய்  மீது, வௌ்ளை வானில் வந்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இனந்தெரியாத சிலர், நேற்று காலை 7 மணியளவில் தன் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்​சென்றதாக, தாக்குதலுக்கு உள்ளான இராணுவ சிப்பாய், கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான இராணுவ சிப்பாய், சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி வேறு பெரிய வைத்திசாலையில் சிகிச்சைப் பெறவேண்டும் என, பொலிஸாரிடம் அறிவித்துவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...