கனடாவில் ஐஸ் ஹாக்கி வீரர்கள் சென்ற பேருந்து, டிரக் நேருக்கு நேர் மோதிய விபத்து

கனடா வில் நாட்டில் ஐஸ் ஹாக்கி வீரர்கள் சென்ற பேருந்து எதிரே வந்த டிரக் உடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கனடா நாட்டில் ஒரு உள்ளூர் ஐஸ் ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்காக ஒரு ஜுனியர் அணி வீரர்கள் பேருந்தில் சென்றுள்ளனர்.

இதன்போது  சாஸ்கட்சேவான் மாகாணத்தின் திஸ்டேல் நகருக்கு அருகில் பேருந்து  சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிரக்  வண்டியுடன் பேருந்து நேருக்கு நேர் மோதியதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

பேருந்தில் 28 பேர் பயணம் செய்த நிலையில்  இந்த கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன்  மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை விபத்தில் சிக்கி ஹாக்கி வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்கனடாவிளையாட்டுவீரர்கள்
Comments (0)
Add Comment