தனது கணவர் வீட்டிலில்லா சந்தர்ப்பத்தில் வீட்டுக்குள் நுழைந்த ஸ்ரீ பொலிஸார் நால்வர் தன்னை தள்ளிவிட்டதாகவும், இதனால் தனது வயிற்றுப் பகுதியில் அடிபட்டதாகவும் தெரிவித்துள்ள குறித்த பெண் கர்ப்பிணியான தான் பொலிஸாரின் தாக்குதலுக்கு பின் வயிறு வலியினால் அவதியுறுவதாகவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தனது கணவர் எங்கே எனக் கேட்டுக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
எனினும் தனது கணவனை பொலிஸார் தேடிக்கொண்டு வந்தமைக்கான காரணம் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள சாலியவௌ பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தனக்கு இதுபற்றி தெரியாது என்றும் கடமை நிமித்தமே ஓ.ஐ.சி தலைமையிலான பொலிஸ் குழு அங்கு சென்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.