கல்வெட்டுக்களை பாதுகாத்த விடுதலைப்புலிகள்! தொடந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை

வவுனியாவில் உள்ள சுமார் 150 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன கல்லறையான சுமேரியன் கல்லறையை, புதையல் தோண்டும் திருடர்கள் அழித்து வருகின்றனர் என்று பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அதன் தொன்மையை மதித்து போரின்போது விடுதலைப் புலிகளே அழிக்காமல் பாதுகாத்தனர் என்று தெரிவிக்கும் பிரதேச மக்கள், தற்போது திருடர்கள் அங்கு தமது கைவரிசை காட்டி வருகின்றனர் என்றும் கூறியுள்ளனர்.

ஆரம்பகால மனிதர்கள் 89 பேரினது கல்லறைகள் அங்கு காணப்படும் நிலையில் அங்கு செல்வதற்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் அந்தப் பகுதியில் காணப்படும் தேக்கு மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்று தெரிவிக்கும் மக்கள், பாதுகாக்கப்பட வேண்டிய அந்தப் பிரதேசத்தை அழிவிலிருந்து தடுக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

கல்வெட்டுதமிழாபுராதனம்வவுனியாவிடுதலைப்புலிகள்
Comments (0)
Add Comment