காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை இலங்கை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுள்ளது -யஸ்மின் சூக்கா

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் உபகுழுவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டமையை ,

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான யஸ்மின் சூக்கா விமர்சித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை இலங்கை அரசாங்கம் குறைத்து மதிப்பிடும் விதத்தில் மஹிந்த சமரசிங்கவின் நியமனம் அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றம் இடம்பெறவில்லை, பலவந்த காணாமல்போதல்கள் இடம்பெறவில்லை என கூறிய  அரசியல் வாதிகளை உபகுழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்  அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு கால எல்லை எதுவும் நிர்ணயிகப்படாத  நிலையில், உபகுழுவை அமைத்திருப்பது காலத்தை இழுத்தடிக்கும் உள்நோக்கம் யஸ்மின் சூக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் பொறுப்புக் கூறும் விடயத்தில் சர்வதேச சமூகத்துக்கு காணப்படும் ஒரேயொரு நம்பிக்கையாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் காணப்படுகிறதாகவும் அவர்  கூறியுள்ளார்..

இந் நிலையில் அரசாங்கத்தின் இதுபோன்ற நியமனங்கள் கேலிக்கூத்தாக அமைகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

மேலும் காணாமல் போனோரின் எண்ணிக்கையில் ஈராக்குக்கு அதிகமானவர்களைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுகிறதாகவும்,  இவ்வாறான நிலையில் பொறுப்புக் கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தனது முயற்சிகளை துறந்துவிடாமல் நம்பிக்கையுடன் முன்னெடுக்கும் சூழலையே ஏற்படுத்த வேண்டும் எனவும்  ஜஸ்மின் சூக்கா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம்பணிப்பாளர்மஹிந்த சமரசிங்கயஸ்மின் சூக்கா
Comments (0)
Add Comment