புதுச்சேரி அருகே காணாமல் போன விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காரைக்கால் அருகே கடலில் எண்ணெய் படலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விமானத்தை தேடும் பணி தொடர்பாக சென்னையில் ஆலோசனை நடத்திய கடலோர பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் பிஸ்ட், விமானத்தில் சென்ற 3 பேரின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.
மேலும் ஆழ்கடலை ஆய்வு செய்து தேடும் திறன்கொண்ட 2 கடற்படை கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மகாபலிபுரம் முதல் காரைக்கால் வரை தேடும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பிஸ்ட் தெரிவித்தார். காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் 10 கப்பல்கள், 2 விமானங்கள், 1 ஹெலிகாப்டர் ஈடுபட்டுள்ளன.