தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் போன விமானத்தின் எரிபொருள் தான் கடலில் மிதக்கும் எண்ணெய் படலம்மா?

புதுச்சேரி அருகே காணாமல் போன விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காரைக்கால் அருகே கடலில் எண்ணெய் படலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

aircraftகடலில் மிதக்கும் எண்ணெய்யின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு படையின் கிழக்கு பிராந்திய ஐஜி ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும், சேகரிக்கப்பட்ட எண்ணெய் மாதிரிகள், காணாமல் போன விமானத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

 இதனிடையே, விமானத்தை தேடும் பணி தொடர்பாக சென்னையில் ஆலோசனை நடத்திய கடலோர பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் பிஸ்ட், விமானத்தில் சென்ற 3 பேரின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.

 மேலும் ஆழ்கடலை ஆய்வு செய்து தேடும் திறன்கொண்ட 2 கடற்படை கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மகாபலிபுரம் முதல் காரைக்கால் வரை தேடும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பிஸ்ட் தெரிவித்தார்.  காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் 10 கப்பல்கள், 2 விமானங்கள், 1 ஹெலிகாப்டர் ஈடுபட்டுள்ளன.

Comments
Loading...