கிணற்றுள் தவறி விழுந்த இளைஞன் பலி – வவுனியாவில் சம்பவம்

வவுனியா குருமன்காடு கரப்பன்காடு பகுதியில்  03.02.3016 மாலை கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் வவுனியா பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மெலும் தெரியவருகையில்,வவுனியா குருமன்காடு கரப்பன்காடு பகுதியில் வசித்துவந்த ஜெயப்பிரகாசம் வசந்தன்  என்ற 32வயதுடைய இளைஞன்  காலையிலிருந்து வீட்டில் காணவில்லை என்று தெரிவித்து குறித்த இளைஞனை அனைத்து இடங்களிலும் தேடியபோதும் காணவில்லை. இளைஞனின் தொலைபேசி மற்றும் கண்ணாடி என்பன வீட்டில் இருந்துள்ளது. இதையடுத்து சந்தேகம் ஏற்பட்டு வீட்டிலுள்ள கிணற்றுக்குள் தேடியபோது கிணற்றுக்குள் வீழ்ந்த இளைஞனின் உடல் மறைந்திருந்தது தெரியவந்துள்ளது.

உடனடியாக கிணற்றிலிருந்து மாலை மீட்கப்பட்ட இளைஞனை வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் குறித்த இளைஞர் இறந்தவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குளிக்கச் சென்றபோது தவறி வீழ்ந்திருக்கலாம் என்று தெரியவருகின்றது. மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கரப்பன்காடு இளைஞன்கிணறுகுருமன்காடுசடலம்தவறிபலிபொதுமருத்துவமனைவவுனியாவிழுதல்
Comments (0)
Add Comment