கிளிநொச்சியில் இரண்டு சடலங்கள் மீட்பு!

கிளி­நொச்சி கன­க­பு­ரத்­தி­லுள்ள கிணற்றில் இருந்து இளைஞன் ஒரு­வரின் சடலம் நேற்­று­முன்­தினம் திங்­கட்­கி­ழமை மீட்­கப்­பட்­டுள்­ள­தாக கிளி­நொச்சிப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

மேற்­கு­றித்த பகு­தியைச் சேர்ந்த பொன்­னம்­ப­ல­நாதன் சிவ­கரன் (வயது 29) என்ற இளை­ஞனே சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­வ­ராவார். குறித்த சடலம் உற­வி­னர்­களால் அடை­யாளம் காணப்­பட்­ட­தை­ய­டுத்து கிளி­நொச்சி மரண விசா­ரணை அதி­காரி டாக்டர் க.திருலோ­க­மூர்த்தி மரண விசா­ர­ணையை மேற்­கொண்ட பின்னர் பிரேத பரி­சோ­த­னைக்கு உத்­த­ர­விட்டார்.

குறித்த இளைஞன் கடந்த ஞாயிற்­றுக் ­கி­ழமை காணாமல் போயுள்­ள­தாக உற­வி­னர்­களால் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்ட நிலை­யி­லேயே அவர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, கிளி­நொச்சி கோவிந்தன் கடைச் சந்­திக்கு அரு­கா­மையில் குடும்­பஸ்தர் ஒரு­வரின் சடலம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மீட்­கப்­பட்­டுள்­ள­தாக கிளி­நொச்சி பொலிஸார் தெரி­வித்­தனர்.

கிளி­நொச்சி இரத்­தி­ன­புரம் கிருஷ்ணர் கோவி­லடிப் பகு­தியைச் சேர்ந்த முனி­யாண்டி குமா­ர­சாமி (வயது 52) எனும் ஐந்து பிள்­ளை­களின் தந்­தையே இவ்­வாறு சட­ல­மாக மீட்­கப்­பட்­ட­வ­ராவார்.

சடலம் உற­வி­னர்­களால் அடை­யா­ளங்­கா­ணப்­பட்­ட­தை­ய­டுத்து கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரி மரண விசாரணையை மேற்கொண்டதையடுத்து பிரேத பரிசோத-னைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்-பி-டத்தக்கது.

இரண்டுகிளிநொச்சியில்சடலங்கள்மீட்பு
Comments (0)
Add Comment