கிளிநொச்சியில் மீண்டும் விசாரணை நாடக அரங்கேற்றம்!

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் நாடக அமர்வு, கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (25) காலை ஆரம்பமாகியுள்ளது.

ஆணைக்குழுவின்(நாடகக்குழுவின்) தலைவர் மக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்த அமர்வானது, எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அனைத்து அமர்வுகளும் மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளன.

இன்றைய அமர்வில் கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 360 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை செவ்வாய்க்கிழமை (26) கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 362 பேரும் 27ஆம் திகதி புதன்கிழமை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 250 பேரும்  28ஆம் திகதி வியாழக்கிழமை பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி (பளை) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்;த 194 பேரும் சாட்சியமளிக்கவுள்ளனர்.

மொத்தமாக 1,166 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்னமும் எத்தனை நாட்களுக்கு விசாரணை எனும் நாடக அரங்கேற்றம் நடாத்தி உலகை ஏமாற்றப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம் .

காணாமல் போனோர்கிளிநொச்சிஜனாதிபதிபரணகமபுதன்கிழமைவிசாரணைஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment