கிளிநொச்சி மாவட்ட கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் கவின் கலை விழா 2015இல் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் , இந்திய அரசாங்கம் வழங்கி வரும் கலைத்துறை சார்ந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாணவர்களையும் இந்தியாவிற்கு அனுப்பி கலைத்துறை உயர் கல்வியைகற்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்த அவர மாணவர்கள் கலைத் துறையில் காட்டும் அதே ஆர்வத்தை கல்வியிலும் காட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இனிவரும் காலங்களில் இந்தியக் கலைஞர்கள்இலங்கைக்கு வருகை தரும் போது கிளிநொச்சியிலும் அவர்களின் நிகழ்வுகளை நடாத்துவதற்குஏற்பாடுகளை மேற்கொள்ளப்படும்.
கிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றம் மிகக்காத்திரமான சேவைகளை ஆற்றி வருகின்ற தன்மையினை அறிய முடிகின்றது மாணவர்கள் மத்தியில் கலை பண்பாடுகளை மட்டுமன்றி கடமை உணர்வையும் பொறுப்புணவையும் கூட வளர்த்தெடுப்பதில் இம் மன்றம் அதிக கவனம் செலுத்தி வருகின்ற தன்மையினையும் இன்றைய நிகழ்வுகள் வெளிப்படுத்தின.
எனவே இந்த கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றம் மிக அற்புதமான செயற்பாட்டைக்கொண்டுள்ளது என்பதில எந்த ஐயமும் இல்லை என குறிப்பிட்ட அவர் எதிர் காலத்தில் தங்களுடைய ஒத்துழைப்பு கிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்திற்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.