முதல் நாள் நிகழ்வில் கல்விக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. தொடர்ந்து பேருரையினை பேராசிரியர் க.சின்னத்தம்பி வழங்கவுள்ளார். தொடர்ந்து ஆசிரியர்களின் ஆய்வுரைகள் சமர்பிப்பு நிகழ்வு இடம்பெறும்.
இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை திறந்த பல்கலைக்கழக கலைப்பீட விரிவரையாளர் ரஜனி மங்களேஸ்வரசர்மா அவர்கள் பேருரையினை வழங்கவுள்ளார்கள். தொடர்ந்து ஆசிரியர்களின் ஆய்வரைகள் சமர்ப்பித்தல் இடம்பெறும். கலைநிகழ்வுகள் வரிசையில் விவாத அரங்கு , இசைநிகழ்வு , முன்பள்ளி ஆசிரியர்களின் நிகழ்வு , நடனம் , ஆரம்பக்கல்வி ஆசிரியர்களின் நிகழ்வு , நாடக ஆற்றுகை என்பன இடம்பெறவுள்ளது.
எனவே இவ் ஆசிரிய மாநாட்டு நிகழ்விற்க்கு ககல்வியியலார்களையும் ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.