கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியிலுள்ள ஆலயங்களில் கொள்ளையில் ஈடுபட்டதாக மூன்று பெண்கள் உட்பட நால்வர் சந்தேகத்தின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
புத்தளத்திலிருந்து சென்றவர்களே கிளிநொச்சி ஆலயங்களில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து நேற்றுவரை (07-06-2017) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த வழக்கு நேற்று மறுபடியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.