கிளிநொச்சியின் பல்வேறு பகுதிக-ளிலும் பதிவு செய்யப்படாததும் சட்டவிரோதமான முறையிலும் விடுதிகள் மற்றும் வாடகையறைகள் என்பன காணப்படுகின்றன. இவற்றின் மூலம் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புக்கள் என்ற போர்வையில் பெண்கள் அழைத்து வரப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படு-கின்-றமை போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்-பெற்றிருக்கின்றன.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பதிவிற்கு உட்படுத்தப்படாத விடுதிகள் உடனடியாக பதிவுகளிற்கு உட்படுத்துமாறும் இவ்வாறு பதிவுகளிற்கு உட்படுத்தாத விடுதிகளை சோதனையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.