கிளியில் த.தே.கூ மாகாணசபை விசேட கூட்டம் இன்று!

எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் இன்­றைய தினம் கிளி­நொச்சி கூட்­டு­ற­வுச்­சங்க மண்ட­பத்தில் விசேட ஒருங்­கி­ணைப்பு குழுக்­கூட்டம் காலை 10 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது. வடக்கு கிழக்கு பகு­தி­க­ளைச்­சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன், மாகா­ண­சபை அமைச்­சர்கள் மற்றும் மாகா­ண­ச­பை­களின் உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

ஓகஸ்ட் மாதம் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மான ஒரங்­கி­ணைப்புக் கூட்­டத்தைக் கூட்­டு­மாறு பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பலரால் தரப்­பி­ன­ராலும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. விசே­ட­மாக தேசி­யப்­பட்­டியல் விவ­காரம், ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30ஆவது கூட்­டத்­தொ­டரில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை ஆத­ரித்­தமை, அர­சியல் கைதிகள் உட்­பட பொது­மக்கள் குறித்த பொதுப்­பி­ரச்­சி­னைகள் குறித்த செயற்­பா­டுகள், தொடர்பில் கலந்­தா­லோ­சிக்­கப்­ப­டாது முடி­வுகள் எடுக்­கப்­பட்­ட­தாக கூட்­ட­மைப்­பினுள் சர்­சைகள் வலுத்­தி­ருந்­தன.இத­னை­ய­டுத்து கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யினர், வட மாகா­ண­ச­பையின் சில உறுப்­பி­னர்கள், கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னி­டத்தல் நேர­டி­யா­கவும் கடிதம் மூல­மாக கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்­தனர்.

மறு­பக்­கத்தில் வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஷ்­வ­ரனை இணைத்­த­லை­மை­யாகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னாலும் கூட்­ட­மைப்­பினுள் குழப்­ப­க­ர­மான நிலை­மைகள் எழுந்­தி­ருந்­தன. இவ்­வா­றா­ன­தொரு சூழலில் தற்­போது புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான பிரே­ரணை பாரா­ளு­மன்றில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அனைத்து தரப்­பி­ன­ரதும் கருத்­துக்கள் கோரப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான நிலை­மை­க­ளி­லேயே இவ்­வொ­ருங்­கி­ணைப்பு கூட்டம் இடம்­பெ­று­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

புதிய அர­ச­மைப்பு தொடர்பில் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு, இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்த வரைவை உரு­வாக்­குதல், ஐ.நா. தீர்­மானம், மீள்­கு­டி­யேற்றம் மற்றும் வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்தி உட்­பட சம­கால சர்ச்­சைகள் , அடுத்து முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள விட­யங்கள் தொடர்பில் இந்தக் கூட்­டத்தில் ஆரா­யப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய செயற்­குழுக் கூட்டம் நாளை வௌ்ளிக்­கி­ழமை வவு­னி­யாவில் நடை­பெ­ற­வுள்­ளது. அக்­கட்­சியின் தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா தலை­மையில் நடை­பெறும் இக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தனும் பங்கேற்கவுள்ளார். இதன்போது தமிழரசுக்கட்சியின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தெரியவருகின்றது.

இன்றுகிளியில்கூட்டம்த.தே.கூமாகாணசபைவிசேட
Comments (0)
Add Comment