கிளிநொச்சி நகரப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், மாணவி ஒருவரது குடிதண்ணீரில் மர்மப்பொருள் கலக்கப்பட்டுள்ளது. இந்தக் குடிதண்ணீரைப் பருகிய மாணவி கடந்த 24ஆம் திகதி கிளிநொச்சி மருத்துவமனையில் உடனடியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.
மாணவி வகுப்பில் தொடர்ச்சியாக முதலிடம் பெற்றுவருவதே இதற்குக் காரணம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மாணவி பருகிய குடிதண்ணீர் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் இரகசிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருடன் வலயக் கல்விப் பணிமனையினர் கலந்துரையாடியுள்ளனர்.
பெற்றோரது சம்மதத்துடன் மாணவியை வேறு பாடசாலைக்கு மாற்றி, மாணவியின் கல்வி நடவடிக்கை தொடர்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.