25, 26ஆம் திகதிகளில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டவர்களுக்காகவும் 27ஆம் திகதி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டவர்களுக்காகவும் 28ஆம் திகதி பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டவர்களுக்காகவும் அமர்வுகள் நடத்தப்படவுள்ளன.
இந்த அமர்வுகளின்போது சாட்சியமளிப்போருக்கான அழைப்புக்கள் மாவட்ட செயலகத்தின் ஊடாக விடுக்கப்பட்டுள்ளதோடு புதிதாக முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும் முடியுமென ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியுடன் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் மேலும் மூன்று மாத காலம் ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இறுதி அறிக்கையொன்றும் கோரப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்றிருந்த காணமல் போனோர் தொடர்பான சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்காக மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவை 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மஹிந்த ராஜபக் ஷ நியமித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பல்வேறு அமர்வுகளை நடத்திய இந்த ஆணைக்குழு 23ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளை பதிவுசெய்திருந்ததோடு கடந்த ஆண்டு இடைக்கால அறிக்கையொன்றையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது மக்களையும் உலகையும் ஏமாற்றும் இந்த விசாரணைக் குழுவின் நாடக அரங்கேற்றம் எப்போது முடிகிறதென பொறுத்திருந்து பார்ப்போம்.