பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. வாகனமானது பரந்தன் நோக்கிப் பயணித்த கப் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்தே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.