கிளியில் விரைவில் பால் உற்பத்தி நிலையங்கள்!

கிளி­நொச்சி மாவட்­டத்தில் உற்­பத்­தி­யாகும் பாலில் அறு­பத்­தைந்து வீத­மா­னவை மாவட்­டத்­தை­விட்டு வெளியே கொண்டு செல்­லப்­படும் நிலையில் இதனைத் தடுத்து நிறுத்தி மாவட்ட மக்கள் பயன்­பெறும் வகை­யிலே பால் உற்­பத்தி விற்­பனை நிலை­யங்கள் திறக்­கப்­ப­டவுள்ள­தாக கிளி­நொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அரு­மை­நா­யகம் தெரி­வித்தார்.

கிளி­நொச்சி மாவட்ட செய­லக வளா­கத்தில் ஐரோப்­பிய ஒன்­றிய நிதிப்­பங்­க­ளிப்­புடன் வேள்ட்­விஷன் நிறு­வ­னத்தால் நிறு­வப்­பட்ட பால் உற்­பத்தி விற்­பனை நிலையக் கட்­ட­டத்தை அண்­மையில் திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில்,

கிளி­நொச்சி மாவட்ட மக்­களில் அதி­க­ள­வானோர் போஷாக்குக் குறைந்­த­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர் .இது தொடர்­பான ஆய்­வுகள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்த நிலையில் எமது மாவட்­டத்தில் உற்­பத்­தி­யாகும் பால் வெளி­யி­டங்­க­ளுக்கு எடுத்துச் செல்­லாமல் எமது மக்கள் பய­ன­டைய ஏது­வாக நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன்.

இது தொடர்பில் லிக்கோ நிறு­வ­னத்தின் ஒத்­து­ழைப்பும் கோரப்­பட்­டுள்­ளது. இங்கு உற்­பத்­தி­யாகும் பால் எமது மக்­க­ளுக்குப் பூர்த்­தி­யான பின்பு மேல­திக பாலை வெளி­மா­வட்­டங்­க­ளுக்குக் கொண்டு செல்­லலாம். இதில் எந்தத் தடையும் இல்லை.

ஐரோப்­பிய ஒன்­றிய நிதிப்­பங்­க­ளிப்­புடன் வேள்ட்­விஷன் நிறு­வனம் எமது மாவட்ட செய­லக வளா­கத்தில் மிக அழ­கா­கவும் நேர்த்­தி­யா­கவும் மக்கள் பயன்­படும் வகையில் பால் உற்­பத்தி விற்­பனை நிலையக் கட்­ட­டத்தை அமைத்து எம்மிடம் ஒப்­ப­டைத்­துள்­ளது. இதை­யிட்டு மகிழ்ச்­சியும் பெரு­மி­தமும் அடைகிறேன்.

இங்கு பால் உற்பத்தி மட்டுமல்ல பாற்பொருட்கள் விற்பனையும் இடம்பெறும். இதனை மக்கள் பெற்று போஷாக்கு மிகுந்தவர்களாகத் திகழ வேண்டும் என்றார்.

உற்பத்திகிளியில்நிலையங்கள்பால்விரைவில்
Comments (0)
Add Comment