கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போதும் எவ்வித பொருட்களும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியுடன் மாவடி அம்மன் கிராம சேவையாளர் மற்றும் சமாதான நீதவான் முன்னிலையில் கிளிநொச்சி பொலிஸாரால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
முதலாவது அகழ்வுப் பணிகளின் போது எவ்வித பொருட்களும் கிடைக்காத நிலையில் இரண்டாவது கட்ட அகழ்வு பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் அதன்போதும் எவ்விதப் பொருட்களும் கண்டெடுக்கப்படாத நிலையில், கிராம சேவையாளர் மற்றும் சமாதான நீதவான் ஆகியோரின் பணிப்புரையின் பேரில் அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளன.