வடக்கில் போர் முடிவுக்கு வந்த பின்னர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் வடபகுதியில் புகையிரத நிலையங்கள் மற்றும் புகையிரத பாதை என்பன அமைக்கப்பட்டன.
இதன்படி, கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட பிரதான புகையிர நிலையத்தின் சுவர்கள் மற்றும் மேல் தட்டுக்களில் அபாயரமான வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. வெடிப்புக்களின்மீது ஒட்டு வெண் பசை பூசப்பட்டுள்ளது. புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகளிடையே இந்த வெடிப்புக்கள் அச்சத்தை ஏற்பட்டுத்துகின்றன.
உரிய வகையில் கட்டடங்கள் அமைக்கப்படாததன் காரணமாகவே இவ்வாறு வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டடத்தின் தன்மை குறித்து உரிய முறையில் ஆராய வேண்டும் எனவும் கிளிநொச்சியை சேர்ந்த கட்டட பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருபத்து நான்கு மணிநேரமும் மக்கள் போக்குவரத்தில் ஈடுபடக்கூடிய புகையிர நிலையம் ஒன்றை அமைக்கும்போது மிகவும் அவதானம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடும் குறித்த பொறியியலாளர் குறித்த கட்டடம் உரிய தரத்தை கொண்டிருக்காததன் வெளிப்பாடாகவே அவ் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.